வீரகேசரி இணையம் 6/6/2009 3:14:22 PM - யாழ்பாணம் மயிலிட்டி பகுதியில் உள்ள இராணுவ ஆயுத கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார் |
ஜூன் 7, 2009
யாழ்பாணம் இராணுவ ஆயுத கிடங்கில் தீ
தாண்டிக்குளம் வரை யாழ்தேவி சேவை
20 வருடங்களுக்கு பின்
தாண்டிக்குளம் வரை யாழ்தேவி சேவை
(தாண்டிக்குளத்திலிருந்து சாதிக் ஷிஹான்)
‘தெற்கின் தோழன்’ என்ற தொனிப்பொருளில் வவு னியா தாண்டிக்குளம் நோக்கி நேற்றுக்காலை 6.10க்கு புறப் பட்ட யாழ் தேவி ரயில் பகல் 12.00 மணியளவில் தாண்டிக்குளம் ரயில் நிலை யத்தை சென்றடைந்தது.
பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டதன் பின் 20 வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக தாண்டிக் குளம் வரை யாழ் தேவி ரயில் சென்றுள்ளது.
தாண்டிக்குளத்திலிருந்து காங்கேசன்துறை வரை ரயில் பாதையை அபிவிருத்தி செய் வதற்கான முதற்கட்ட நடவ டிக்கையாக நிதி சேகரிப்பு நிகழ்வும் நேற்று தாண்டிக் குளம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. போக்குவ ரத்து அமைச்சர் டலஸ் அழ கப்பெரும 1000 ரூபா பெறு மதியான முதலாவது யாழ் – கொழும்பு ரயில் பயண சீட்டை ஜனாதிபதியின் சிரே ஷ்ட ஆலோசகர் பசில் ராஜ பக்ஷவுக்கு வழங்கினார்.
கொழும்பில் நேற்றுக் காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புற ப்படுவதற்கு முன்னதாக மத வழிபாடுகள் நடைபெ ற்றன. அமைச்சர் டலஸ், லசந்த அழகியவன்ன, திஸ்ஸ கரலியத்த ஆகியோர் ரயிலி லேயே பயணம் செய்தனர்.
நேற்றுக்காலை சுமார் 12.00 மணியளவில் தாண்டி க்குளம் ரயில் நிலையத்தை அண்மித்த போது பாதை யின் இரு மருங்கிலும் பாட சாலை மாணவர்கள் தேசி யக் கொடியை அசைத்தவாறு ரயிலை வரவேற்றனர். முதல் தடவையாக ரயில் இப் பகுதிக்குள் வருவதால் மக் கள் பெரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
ரயில் வவுனியாவை சென் றடைந்த போது வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க உட்பட பலரும் ரயில் பய ணத்தில் இணைந்து கொண் டமை குறிப்பிடத்தக்கது.
தாண்டிக்குளம் ரயில் நிலை யத்தில் விசேட கூட்டமொ ன்றும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அமைச்சர்க ளான டலஸ் அழகப் பெரும, லசந்த அழகியவ ன்ன, சுசந்த புஞ்சிநிலமே, திஸ்ஸ கரலியத்த, டக்ளஸ் தேவானந்தா, விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), பிரதி அமைச்சர் லயனல் பிரேமசிறி உட்பட பலரும் கலந்து கொண்ட னர். நேற்றைய நிகழ்வில் தமி ழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கலந்துகொண்டார்.
போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழு ம்பு – யாழ் பயணச் சீட் டொன்றையும் கிஷோர் எம். பிக்கு வழங்கினார்.
கொழும்பு கோட்டையி லிருந்து யாழ்ப்பாணம் வரை யிலான பயணச் சீட்டு 1000 ரூபா பெறுமதியானதுடன் கெளரவ வகுப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
வவுனியா ரயில் நிலை யத்தில் வைத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை வரவேற்ற போது கிஷோர் எம். பியும் வரவேற்றார். அங்கிருந்து தாண்டிக்குளம் வரையிலும் ரயிலிலேயே அமைச்சர்களுடன் சென்ற னர்.
இதனையடுத்து ஓமந்தை க்கு வந்த அமைச்சர்கள் குழுவினர் ஓமந்தை ரயில் நிலையத்திற்கான அடிக் கல்லையும் நாட்டினர். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜ பக்ஷ உட்பட அமைச்சர்கள் ரயில் நிலையத்திற்கான அடிக் கல்லை நட்டதுடன், ரயில் நிலையத்திலேயே மனிதா பிமான கரும பீடம் ஒன் றையும் ஆரம்பிக்கவுள்ளதா கவும் தெரிவித்தனர்.
நேற்று மாலை 3.00 மணி க்கு யாழ் தேவி ரயில் மீண் டும் கொழும்பு நோக்கி புறப்பட்டது. தேசியக் கொடி களாலும் மலர் மாலைக ளினாலும் யாழ் தேவி
ரயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள், அமைச் சின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், ரயில்வே பாதுகா ப்பு பிரிவினர், ஊடகவியலாளர்கள், மட்டு, வவுனியா இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர்கள் உட்பட சுமார் 300 பேர் இந்த ரயிலில் பயணம் செய்தனர். (ள)
வீணையா?… வெற்றிலையா?…. ஈ.பி.டி.பி கட்சிக்குள் உள்நிலை விவாதம்!
ஏதிர் வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஈ.பி.டி.பி எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்த உட்கட்சி விவாதம் நடந்து வருவதாக அறியப்படுகின்றது.இது வரை காலமும் தனித்துவமாக தேர்தல்களில் வீணைச்சின்னத்தில் போட்டியிட்டிருந்த ஈ.பி.டி.பி யினர் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் கூட்டமைப்பு விடுத்திருக்கும் வேண்டுகோளை அடுத்து எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஈ.பி.டி.பி யின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதில் வீணைச்சின்னத்தின் தொடர்ந்தும் தனித்துவமாகவே போட்டியிட வேண்டும் என்று ஒரு சாராரும்,வெற்றிலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று இன்னொரு சாராரும், இதை விட கட்சி ஏந்த முடிவை எடுக்கின்றதோ அதற்கு தாம் கட்டுப்பட தயார் என இன்னொரு சாராரும் கட்சிக்குள் கருத்து தெரிவித்து வருவதாக அறியப்படுகின்றது.கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுமாறு அரசாங்கம் விடுத்திருந்த அழைப்பை ஏற்க மறுத்த ஈ.பி.டி.பி யினர் தமது வீணைச்சின்னத்தில் தனித்து நின்று தனித்துவமாக போட்டியிட்டிருந்தனர் என்பது குறிப்படத்தக்கது.
இதே வேளை எதிர் வரும் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது சரியானது என்பது குறித்து யாழ்,மற்றும் வவுனியா வாழ் மக்களிடம் ஈ.பி.டி.பி யின் முக்கியஸ்தர்கள் கருத்துக்களை அறிந்து வருகின்றனர் என்றும்,மக்கள் எதை விரும்புகிறார்களோ அதையும் கருத்தில் எடுத்தே கட்சி சரியான ஒரு தீர்மானத்திற்கு வரும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.இதே வேளை பொதுச்சினத்தில் போட்டியிடுவது குறித்து தாம் சரியான முடிவை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும்,ஆனாலும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியாக இணைந்து செயற்படுவதற்கு ஈ.பி.டி.பி ஒரு போதும் உடன்பட்டு போகாது என்றும் ஈ.பி.டி.பி யின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் தொடர்ந்தும் எமது இணையத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
நன்றி: எங்கள் தேசம் இணையம்
பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடையல்ல – 53ஆவது படையணி தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல. அதை நாமே அணிவித்தோம் என இராணுவத்தின் 53 ஆவது டிவிசனின் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மே 19 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே பிரபாரகன் சண்டையில் உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
53 ஆவது படையணியே பிரபாகரனின் சடலத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிங்கள வார இதழான லங்காதீபவுக்கு வழங்கி செவ்வியிலேயே மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது: (19 ஆம் திகதி) 9.30 மணியளவில் ஆரம்பமான சண்டை நீண்ட நேரம் நீடித்தது. காட்டிற்குள் சென்ற எமது சிப்பாய் ஒருவர் என்னுடன் பேசினார். “சேர், பிரபாகரனின் உடல் இருக்கிறது’ என அவர் கூறினார். அவர் அப்படிக் கூறும்போது அதை நம்புவதா இல்லையா என்று தெரியவில்லை. அப்போது சண்டை நடந்துகொண்டிருந்தது.
நான் அந்த உடலைக் காட்டிற்கு வெளியே கொண்டு வருமாறு கூறினேன். எனது பொடியன்கள் (சிப்பாய்கள்) அந்த உடலை எனது காலடியில் கொண்டுவந்து போட்டனர். முழு இலங்கையும் பார்க்க ஆவலாக இருந்த உடலை நான் பார்க்கும் வரை உறக்கமின்றி இருந்தேன். அந்த உடலை தண்ணீரில் இழுத்துக்கொண்டு வரும்போது சுமார் 3000 சிப்பாய்கள் அங்கு கூடிவிட்டனர்.
19ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோதுதான் பிரபாகரன் சண்டையில் கொல்லப்பட்டார். பிரபாகரன் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு 2 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுவதெல்லாம் பொய்யானது.
பிரபாகரனை கொன்றது எனது படைப்பிரிவின் சிப்பாய்களே. பிரபாகரன் பற்றி கூறப்பட்ட பல கதைகளில் ஒரு கதை உண்மையானது. அதாவது, பிரபாரகனின் சடலத்திலிருந்த சீருடை பிரபாகரன் மரணடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல.
அது பிரபாகரன் மரணமடைந்த பின்னர் எம்மால் அணிவிக்கப்பட்ட ஆடையே. அந்தச் சீருடையை பிரபாகரனின் சடலத்திற்கு அணிவித்தவர்கள் எமது சிப்பாய்களே. அந்த சடலத்தைப் பார்த்த முதல் டிவிசன் தளபதி நானே. என்னால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.
நான் இராணுவத் தளபதிக்கு அழைப்பு மேற்கொண்டு பேசினேன். பிரபாரகனின் சடலம் இருப்பதாக கூறியதும் இராணுவத் தளபதி “ஆர் யூ ஷவர்?’ என்று கேட்டார். “ஷவர் சேர்’ எந்த சந்தேகமுமில்லை.
பிரபாரகனின் சடலத்தை நாம் இனங்கண்டுள்ளோம் என நான் பதிலளித்தேன். பின்னர் எனது சகோதரர்கள் போல் பழகிய ஏனைய படைத்தளபதிகளுக்கும் தகவல் தெரிவித்தேன்
Yal Devi to reunite North and South

yal thevi
A thirty-year conflict comes to an end, and we bid farewell to an age of separation and usher in a new era of togetherness.
The “Yal Devi” track, which united the Sinhalese, Tamil, Muslim and Burgher communities of the North and the South in times gone by, fell into ruin, and the trains ran only to Vavuniya, thereby making the division between the North and the South larger, said Project Director of the Yal Devi Louzanne Perera.
The track is now being rebuilt and the “Yal Devi” is poised to bring together the people of the North and the South again.
On the directive of President, Mahinda Rajapaksa the Ministry of Transport has dedicated itself to rebuild the railway track, which will cost an estimated Rs. 15 billion.
After the 4 Km track from Vavuniya to Thandikulam has been completed as the first stage, the track is to be further extended up to Kankesanthurai. An Uthuru Mithuru campaign has been launched islandwide to raise funds for this endeavour.
Yesterday, the Yal Devi made its maiden journey with religious observances at the Colombo Fort Railway Station.
The train went beyond Vavuniya after thirty-years on the Northern line up to Thandikulam, which was refurbished recently. Plans are under way by the Railway Department to extend the Yal Devi service up to Kankesanthurai, the final destination on the Northern line.
Tourist arrivals to hit all-time record
Earnings will surpass $ 1 billion mark:
by Shirajiv SIRIMANE
The number of tourist arrivals to Sri Lanka will hit an all-time record high in two years due to permanent peace in the country, said Chairman, Sri Lanka Tourism Development Authority, Bernard Goonetilleke. He said that with the war ending, tourism would be one of the first industries to recover completely. The current tourist arrival figures were very low mainly due to the conflict which followed adverse travel advisories against Sri Lanka. “There was a 20 percent drop in the first quarter of this year. However, we expect the number of arrivals to pick up especially from the European sectors from next year,” he said.
Former Sri Lankan Envoy in the United States Goonetilleke said that it would take time for travel advisories to be lifted.
“However, when it is reviewed it would be in favour of Sri Lanka. This would benefit the industry,” he said. The global recession and H1N1 virus has also restricted global travel and this too has a negative impact on Sri Lanka.
The Chairman said that apart from tourists Sri Lankan expatriates too would return to Sri Lanka in large numbers from this winter. “This is a new market which was born out of peace,” he said. The Sri Lanka Tourism Development Authority has also launched special promotions in Europe and this would attract more tourists by the end of the year. Managing Director, Sri Lanka Tourism, Dilip Mudadeniya, said that with the war ending, tourism would move from the current fourth foreign exchange earner position to the top spot soon.
The current earnings are around US $ 450 million and I am sure it will pass the US one billion mark when the number of tourist arrivals double.
The current number of tourist arrivals to the country is around 500, 000.
“Though the war ended last month it would not have a positive impact for arrivals this year as travel plans have been already made for this year.
However, the end of the war would definitely help the industry from next year and we anticipate an annual tourist arrival increase of 20 percent per year from next year. “He said that the global melt down too would ease and this would help the industry.
On the instructions of Tourism Minister Milinda Moragoda they would launch special promotions in China and India.
“We hope to stage Sri Lankan operas in both these countries,” he said. (மேலும்…)
Hello world!
Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

